நான் செய்த கவி பயணம்

விளக்கின் ஒளியில் வாழ்வு தொடங்க
அதன் ஒளியில் வாழ்வு ஒளிர
அதன் இறுதியில் அதன் பிறப்புடன் கலந்தது
அதுவே ஆதாரம் அதுவே ஜீவன்
அதுவானது எது என்று உணரு
அதுவே ஆதாரம் அதுவே ஜீவன்
உன்னுள் அதுவே எல்லாம்

எதனால் உரங்குகிறாயோ அதனாலே விழிக்கின்றாய்
எதனால் பார்கிரறாயோ அதனாலே உனருகிறாய்
எதனால் உணருகிறாயோ அதனாலே அலுகிறாய்
எதனால் அலுகிறாயோ அதனாலே சிறிக்கிறாய்
எதனால் சிறிக்கிறாய் அதனை நீ சிந்திக்க மறுக்கிறாய்
எதனால் என்பதை நீ தேடூ
அதுவே கூறும் நீ யாரு
உன்னுள் உணை காண உன்னால் மட்டூம் முடியும்ஒன்றானவன் உன்னில் உயிராய் ஒன்றானவன்
இரண்டானவன் உடலாய் உயிராய் இரண்டானவன்
மூன்றானவன் அறிவாய் உடலாய் உயிராய் மூன்றானவன்
நான்கானவன் உன்னை ஆட்படுதும் மாயையாய் நான்கானவன்
ஐந்தானவன் உன் ஒளியாய் ஐந்தானவன்
ஆறானவன் உன்னில் இருக்கும் அக்கினி கலையானவன்
ஏழானவன் உன் சகஷரா சக்தியாய் ஏழானவன்

உயிரானது எது என்று அறிவாய் மனிதா!
அதுவே முதலனது என்று அறிவாய் மனிதா!
உயிரானது எது என்று உணர்வாய் மனிதா!
அதுவே முடிவானது என்று உணர்வாய் மனிதா!
முதாலனது எது? முடிவானது எது?
அதை அறிவது எது? அதை உணர்வது எது?
சிவனது செயலது அதை நீ உணர்ந்திடு
அவனது வடிவது அதை நீ அறிந்திடு
அறிந்தது அவன் என உணர்ந்திடு
உணர்ந்து உன் கடமையை செய்திடு
அருள்வது அவனது செயல் என இருந்திடு
அவனும் வருவான் அருளும் தருவான்

மரணம் என்பது எதனால் என்று எண்ணிப்பார் மனமே
அது உன்னில் இருக்கும் சக்தி என்பதை தெடிப்பாரு மனமே
அவனது தன்மை கெட்டால் மரணம் நிச்சயம் அறிவாய் நீ மனமே
அகார உகார மகார வடிவாய் இருப்பது அவனின் வடிவு தானே
உன்னில் இருக்கும் பூதம் கெட்டால் அவனும் கெடுவனெ
எல்லா மரணம் இதனில் அடக்கம் எண்ணிப்பார் மனமே
முடிவும் அவன் தானே முதலும் அவன் தானே
எதுவும் அவன் தானே இதுவும் அவன் தானே
ஜொதி வடிவாய் குண்டலினி சக்தியாய் இருப்பது அவன் தானே
உன்னில் இருக்கும் அவனை அறிவாய் நீ மனமே
மரணம் என்பது அவன் செயல் என்று சொல்லுவது இதனாலே

அண்ணாமலை அண்ணாமலை என் எண்ணத்தின் அலை
உண்ணாமுலை உண்ணாமுலை நான் உள்வது உந்தன் மலை
அண்ணாமலை அண்ணாமலை என் உயிரின் அலை
உண்ணாமுலை உண்ணாமுலை உடலின் அன்னை
அண்ணாமலை அண்ணாமலை என் தந்தை ஆனாய்
உண்ணாமுலை உண்ணாமுலை தாயின் அருளால்
அண்ணாமலை அண்ணாமலை என்றும் நினை
உண்ணாமுலை உண்ணாமுலை என்றும் துணை
அண்ணாமலை அண்ணாமலை நான் என்னும் மலை
உண்ணாமுலை உண்ணாமுலை என் அன்னையை நினை
அண்ணாமலை அண்ணாமலை ஜொதி மலை
உண்ணாமுலை உண்ணாமுலை அவரின் துணை
அண்ணாமலை அண்ணாமலை வாழும் மலை
உண்ணாமுலை உண்ணாமுலை வாழ்வின் கலை
அண்ணாமலை அண்ணாமலை என்னை காக்கும் மலை
உண்ணாமுலை உண்ணாமுலை என்னை நெசிக்கும் அன்னை
அண்ணாமலை அண்ணாமலை உலகின் தந்தை
உண்ணாமுலை உண்ணாமுலை உலகின் அன்னை
அண்ணாமலை அண்ணாமலை என் சிந்தயின் நினை
உண்ணாமுலை உண்ணாமுலை அவரின் துணை

குரு என்ற ஒளியை அறியாமல் இருக்கலமா
அந்த குரு என்ற ஒளியை நடாமல் இருக்கலமா
தேடுக மனமே தேடுக மனமே எந்தன் குருவை
நாடுக மனமே நாடுக மனமே எந்தன் குருவை
அருளின்றி கிடைக்காது குரு பாதமே
சிந்தை தெளிவின்றி கிடைக்காது குரு பாதமே
குருவின்றி விலகாது அறியாமையே
அவன் அருள் இன்றி அமையாது குரு பாதமே
தெடி அலைகின்றேன் குரு பாதமே
என் குருவை உணராமல் வாடுகின்றேனே
அந்த ஒளியின்றி இருளடைகின்றேனே
அவனைத்தான் தினமும் தேடுகின்றேனே
தெடிய பாதம் கிட்டும் வரை உறக்கம் இல்லையே
நான் நாடும் குருவை அறியும்வரை மகிழ்வு இல்லையே
நான் நாடிய பாதம், தெடிய பாதம் விரைவில் கிட்டுமே
அதுவே எந்தன் குருவின் அருளாய் என்றும் அமையட்டுமே
கிடைக்குமா குருபாதம் கிடைக்குமா?
ஈசன் அருளின்றி கிடைக்குமா?
ஞான குருபாதம் கிடைக்குமா?
மாயை மறைத்திருக்க கிடைக்குமா?
மன்னன் அவன் பாதம் கிடைக்குமா?
சிந்தை தேளிவின்றி கிடைக்குமா?
யோக குருபாதம் கிடைக்குமா?
பற்றுகள் பற்றிநிற்க கிடைக்குமா?
பரம குருபாதம் கிடைக்குமா?
தேடுதல் இன்றி கிடைக்குமா?
தெளிவை தரவல்ல குருபாதம் கிடைக்குமா?
மார்கம் இன்றி கிடைக்குமா?
மகிழ்ச்சியான குருபாதம் கிடைக்குமா?
பவங்கள் செய்தான் கிடைக்குமா?
பண்பான குருபாதம் கிடைக்குமா?
அறியாமை இருந்தால் கிடைக்குமா?
அன்பான குருபாதம் கிடைக்குமா?
தாயாக கிட்டுமா? தந்தையாக கிட்டுமா?
சொல்லம்மா காலமே பதில் சொல்லம்மா
சிந்தை தெளிய சிவனை பணிந்தேன்
மாயை அழிய மகேசனை பணிந்தேன்
பந்தம் அறுக்க பட்டிஸ்சனை பணிந்தேன்
உடலை துறக்க உமேசனை பணிந்தேன்
பிறவியை கடக்க பித்தனை பணிந்தேன்
அண்டம் அறிய அண்ணலை பணிந்தேன்
பிண்டம் அறிய பிச்சனை பணிந்தேன்
இவைகளை கடக்க உன்னை நீ உணரு என்றான்
என்னை நான் உணர குருவை அடையச் சொன்னான்
எவையும் நான் அறிய இவையே தேவை என்றான்
தேவையை நான் அடைய ஆசியை வேண்டினேன்
குருவை தொழவே தேடினேன் நானும்
தேடுதலுக்காவது நீ உதவு என்றேன்
இன்னமும் கல்லோ எப்பொழுது கிட்டுமோ
வேண்டலை அருளாமல் நானும் விடுவேனோ
அழுதால் பயனில்லை உன்னிடமேஅடிக்க்தான் போகின்றேன் சொல்லாலேஅடிப்பது தான் வலிக்குமோ
என்னாலேவலித்தால் தான் விளிப்பாய் என்று அடித்தேனே
உணர்ச்சியால் கவிபாடினேன் என்று எண்ணாதே
தவத்தாலும் கவிபாடுவேன் என்று நினையாயே
உன்னை கட உள்
உனக்குள் நான்
என்னை விட்டு தேடுவது எதுவோ
பார்பது நான் என்பதை உணர்வாய் மகனே
உடைகள் உனக்கு எனக்கு இல்லை
உடலை பார்பது நானும் இல்லை
என்னை அறிய் ஆவல் உனக்கு
உன்னை காப்பது வேலை எனக்கு
உலகம் முழுவதும் தேடி அலைகின்றாய்
உன்னில் காணவே நீயும் மறுக்கிறாய்
வேடிக்கை இது அல்லவோ வேண்டல் என்னிடமோ
துன்பமின்றி வாழவே மறுத்தாய்
தூய கடமைதனை நீயும் மறந்தாய்
தந்தை தாயை வணங்கவே மறுத்தாய்
விதியை மாற்றவே நீயும் நினைத்தாய்
இவையை கானும் என்னை மறந்தாய்
பொன்னும் பொருளும் பெறவே உழைத்தாய்
பொருளை பெறவே அனைத்தும் துறந்தாய்
மாயை வலையில் நீயும் விழுந்தாய்
மயக்கபட்டு ஏனோ கிடந்தாய்
துன்பம் துடைக்க வந்தேன் நானும்
மாயை மறைக்க என்னையும் ம்றந்தாய்
உன்னை காக்கவே வந்தேன் நானும்
காலம் இல்லை என ஒடினாய் நீயும்
கருனை கொண்டு அனைத்தேன் நானும்
கல்லாய் பார்த்தாய் என்னையும் நீ
உணர்வாய் கலந்தேன் உன்னில் நானும்
உண்ர்ச்சி அற்று கிடந்தாய் நீயும்
அறிவாய் புகுந்தேன் உன்னில் நானும்
அலச்சியம் செய்தாய் என்னையும் நீ
புரியாமல் இருக்கும் உன்னை பார்க்கவே வந்தேன்
பாவவினையால் பார்வையின்றி இருந்தாய் நீயும்
அனைத்தும் விதியின் வேலை என்றே நினைத்தாய்
செயல்கள் நீயாய் இருக்க
என்னை ஏனோ நோந்தாய்
கல்லில் வணங்கினேன் உன்னை
கண்னைதிற என்றாய் நீ
நிரால் அபிசேகித்தேன் உன்னை
நிஜத்தை பார் என்றாய் நீ
மந்திரத்தால் அர்சித்தேன் உன்னை
மனதைதிற என்றாய் நீ
யாகத்தால் பூஜித்தேன் உன்னை
சூச்சமத்தை உணர் என்றாய் நீ
தவத்தால் துதித்திருந்தேன் உன்னை
அதையும் கடந்துவா என்றாய் நீ
அடைய முடியாத என ஏங்கினேன் நான்
அருகிலே அமர்ந்திருந்தாய் நீ
கல்லை வணங்கினாய் கல்லாக
அல்ல மண்னை வணங்கினாய் மண்னாக அல்ல
நீரை வணங்கினாய் நீராக அல்ல
நெருப்பை வண்ங்கினாய் நெருப்பாக அல்ல
எதை நீ வண்ங்கினாயோ அது அதுவாக அல்ல
உன்னை அறிவதில் மட்டும் ஏன் நீ நீயாக இருந்தாய்?
ஓம் அகந்தை அழித்தோம்
ஓம் அண்ணலை அடைந்தோம்
ஓம் கவலை மரந்தோம்
ஓம் கங்கேசனை நினைந்தோம்
ஓம் சங்கடம் அடையோம்
ஓம் சங்கரனை பணிந்தோம்
ஓம் வேண்டுதல் செய்வோம்
ஓம் விசுவநாதனை பணிவோம்
ஓம் பக்தியில் திலைப்போம்
ஓம் பசுபதியை காண்போம்
ஓம் பூஜைகள் செய்வோம்
ஓம் புண்ணியனை பார்ப்போம்
ஓம் படையல்கள் இடுவோம்
ஓம் பிச்சனை அலைப்போம்
ஓம் மந்திரம் சொல்வோம்
ஓம் மகேசனை அடைவோம்
ஓம் தவமும் செய்வோம்
ஓம் தியாகரஜனை எண்ன்ணுவோம்
ஓம் சிந்தனை செய்வோம்ஓம் சிவனை தொழுவோம்
அண்ணாமலை அழைக்கும் மலை
அண்ணாமலை அணைக்கும் மலை
அண்ணாமலை காக்கும் மலை
அண்ணாமலை கருணையின் நிலை
அண்ணாமலை தந்தையின் மலை
அண்ணாமலை தாயின் நிலை
அண்ணாமலை எண்ணத்தின் அலை
அண்ணாமலை எங்கும் நிறை
அண்ணாமலை ஒளியின் மலை
அண்ணாமலை ஓங்காரத்தின் நிலை
அண்ணாமலை உலகின் மலை
அண்ணாமலை உயிரின் நிலை
அண்ணாமலை நான் பாடும் மலை
அண்ணாமலை நான் காணும் மலை
உன்னை காண்பது எப்போழுது
விரதங்கள் இருந்தேன் ஐயாஉன்னை காண்பதற்க்கு
பூஜைகள் செய்தேன் ஐயாஉன்னை காண்பதற்க்கு
யாத்திரைகள் செய்தேன் ஐயாஉன்னை காண்பதற்க்கு
கோவிலுக்கு சென்றேன் ஐயாஉன்னை காண்பதற்க்கு
மந்திரங்கள் சொன்னென் ஐயாஉன்னை காண்பதற்க்கு
யாகங்கள் செய்தேன் ஐயாஉன்னை காண்பதற்க்கு
தானங்கள் செய்தேன் ஐயாஉன்னை காண்பதற்க்கு
கண்ணாலே காண்பதற்க்கு இல்லை என்று
உண்ர்வாலே என்னை உண்ரச்செய்தாயே
உன்னை கட உள்ளே
உன் எண்ணத்தை குறைக்கவே
எண்ணங்கள் குறைந்தால்அமைதி பிறக்கும்
அமைதி பிறந்தால்ஞானம் பிறக்கும்
ஞானம் பிறந்தால்உன்னை உணர்வாய்
உரவுகள் வேண்டுமோ
உணர்த்துபவன் இருக்கையில்
பந்தங்கள் வேண்டுமோ
பரந்தாமன் இருக்கையில்
நண்பர்கள் வேண்டுமோ
நாயகன் இருக்கையில்
அன்பு மட்டும் போதுமேஅனைத்தும் வசபடுமே
நன்மை செய்ய எதிர்பார்பு
நட்பு செய்ய எதிர்பார்பு
தொண்டு செய்ய எதிர்பார்பு
கடமை செய்ய எதிர்பார்பு
உதவி செய்ய எதிர்பார்பு
உரவுக்குள்ளே எதிர்பார்பு
கற்றுத்தர எதிர்பார்பு
கவலை கொடுக்கும் எதிர்பார்பு
எதிரே பார்பதைவிட்டுஉன்னை மட்டும் பார்த்தால்
எங்கே தெறியும் இந்த எதிர்பார்ப்பு
கடவுள் என்று அவனை அழைத்தேன்
உன்னை கட உள் என்றான்
இறைவா என்று நானும் அழைத்தேன்
இருந்தும் அறியாமல் இருக்கிறாயே என்றான்
எங்கே என்று நானும் கேட்டேன்
இங்கே என்று அவனும் சொன்னான்
தேடித்தேடி அழைந்து நின்றேன்
கண்ணாம் புச்சி அவனும் ஆடினான்
உள்ளேன் என்று அவனும் அழைத்தான்
உணர்ந்தே நானும் திருப்பிக்கேட்டேன்
அடே ஆசாமி என்று அழைத்தான்
ஆசாமிக்குள்ளே தான் நானும் உள்ளேன் என்றான்
இங்கே நீ என்றால் ஆங்கே யார் என்று கேட்டேன்
ஒரே நீரை கடல் என்று நதி என்பது போல்
என்னை இறை என்றும், கடவுள் என்றும் சொல்வார்கள்
உண்மை என்ன வென்று கேட்டேன்
உணராமல் ஏன் இருக்கிறாய் என்றான்
அறியா பிள்ளை என்று நானும் அழுதேன்
அமைதியில் தேடு என்று அவனும் உரைத்தான்
பேசும் உன்னை பாக்கவில்லையே என்றேன்
வீசும் தென்றலில் காண்பாய என்றான்
உன்னை உணரத்தான் முடியுமா என்றேன்
இல்லை அரியத்தான் முடியும் என்றான்
உணர்வை உணரவும் நான் வேண்டும் என்றே மறைந்தான்.
பக்தர்களை கண்டேன் ஐயனே
பக்தியை பெற்றேன் ஐயனே
யோகியரை கண்டால் ஐயனே
யோகத்தை யாசிப்பேன் ஐயனே
ரிஷிகளை கண்டால் ஐயனே
ரகசியங்களை கேட்பேன் ஐயனே
முனிவர்களை கண்டால் ஐயனே
முக்தியை கேட்பேன் ஐயனே
சித்தர்களை கண்டால் ஐயனே
சிவானந்தம் கேட்பேன் ஐயனே
சிவனே உன்னை கண்டிருந்தால் ஐயனே
இவர்களிடம் கேட்கமாட்டேன் ஐயனே
என்னை கேட்கவிட்டு வேடிக்கை பார்த்தாய் ஐயனே
திருவிளையாடல் செய்பவன் நீயே நீயே
திரியவிட்டு பார்பவன் நீயே நீயே
பக்குவம் தருபவன் நீயே நீயே
பரமானந்தம் நீயே நீயே
அருவமா, உருவமா?
உருவ வழிபாடு அதுஉள்ளம் உருகும் வழிபாடு
அருவ வழிபாடு ஆனந்த வெளிபாடு
உருவ வழிபாடு இது உலக நிலைபாடு
அருவ வழிபாடு ஆன்ம நிலைபாடு
உருவம் இன்றி அருவம் கிடையாது
இதுவே சிவனின் செயல்பாடு
உருவம் ஒரு நிலைபாடு
அருவம் அதனின் வெளிபாடு
உள்ளம் உருவம் என்றால்
அதன் உணர்வு அருவம் அன்றோ
வழிபாடும் முறைகள் ஒன்றா
இல்லைவழிபடும் தெய்வம் ஒன்றா
உணர்ந்து வழிபடுவாய் உண்மைகள் புலப்படுமே
சிவனின் நிலையதுவே சிந்தனை செய்மனமே.
சிந்தை கலங்காது தியாணிப்பவர்கள்
நல்லது என்று அறிந்தேன்
நடைமுறை படுத்த தாமதம் செய்தேன்
தடையாய் இருப்பது எது என்று அறிந்தேன்
தடையை வெல்ல தயக்கமின்றி எழுந்தேன்
வெல்லும் முயற்ச்சி எளிது அல்ல
வெற்றிக் கனியும் எளிது அல்ல
போரிடும் எதிரி எளியவன் அல்ல
போரிட படைகலும் என்னிடம் இல்லை
நற்சிந்தனை தன்னை நடைமுறை படுத்த
சந்தித்த பகைவர் பலவர் ஆவர்
முயற்ச்சிகள் பலவும் முயன்று பார்த்தேன்
கிட்டிய தொல்வி தொல்விகள் அல்ல
சிந்தனையின் வேகம் செயலில் இல்லை
இதுவே தொல்வியின் கல்வியும் ஆகும்
கற்ற கல்வி உதவியை கொடுக்க
அடைந்த வெற்றி பெருமிதம் அல்ல
போரிட்ட நாட்கள் மாயையின் பிடியில்
வெற்றியின் முடி வாழ்க்கைக் கல்வியின் கையில்
உன்னை உணரு உலகம் வசபடும்
அம்மா வலிக்கிறது
கருவில் இருந்து இன்றாய்
கண்ணாக பார்த்தாய்
கை பிடித்து அழைத்தாய் அமுது கொடுத்து வளர்த்தாய்
மார் மீது சாய்த்தாய் மடியில் வைத்து பார்த்தாய்
உலகாக உன்னையே நினைத்தே உணர்விலே திலைத்து இருந்தேன்
கல்வி என்னும் ஏட்டை கையில் கொடுத்தாய்
கற்று அதனை முடிக்கவும் சொன்னாய்
சொன்னதனை செய்ய கடந்தேன் மண்னையும் மணையையும்
கைபிடித்த கை இன்று கை பார்க்க நேரமின்றி
மடியில் உரங்கிய கண்கள் உரக்கத்தை தேடி
அமுதை உண்ட நாவு சுவையின்றி
உன்னை உலகாக எண்ணிய என்னை
ஏன் அம்மா விட்டாய்
பாசத்தை பொழிந்த நீ பிரிந்தது ஏனோ?
ஞானியாயினும் யோகியாயினும் தாய் முன் இல்லையே
மகனான நான் உன் மருமுகம் காணகடக்கும் தவங்கள் எத்தனை
மாயையான இவ்வுலகில் மாட்டும்சங்கிலிகள் எத்தனை?
மன்னனாக இருந்த என்னைமாட்டி இழுக்கும் வேதனை
அம்மா என்ற அன்பையே மறக்க வைக்கும் வேதனை
உடல் வலியை மறந்தாலும் மனவலியை சுமந்தாலும்
தாயே உன்தன் மடியை தேடி…………..